பிரபாகரனின் மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பித்து, யாருக்கும் அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை தமக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதனை செய்வதற்கான தேவை எமக்கு கிடையாது. பிரபாகரனை கொன்று, தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்தோம். மரபணு பரிசோதனை அறிக்கையை காண்பித்து, யாருக்கும் அதனை உறுதிப்படுத்தும் தேவை எமக்கு இல்லை. அதற்கான தேவை என்ன? பிரபாகரன் எம்முடைய எதிரி. இந்தியாவின் எதிரி அல்ல.
அதனால், யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது.
பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது தொடர்பில் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. பிரபாகரன் உயிரிழந்ததை கருணா அம்மான் உறுதிப்படுத்தினார்.
அதனால் யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.




