தேசியத்தலைவரின் தீர்க்கமான இலட்சியத்தில் உறுதியாக இருப்பதே எமது கடமை- கஜேந்திரகுமார் கருத்து! SamugamMedia

பழ.நெடுமாறனின் அறிவிப்பின் உண்மைத்தன்மை தொடர்பாக தம்மால் எதுவும் கூறமுடியாதுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் உள்ளதாக தமிழ்நாட்டில் வெளியான தகலை தொடர்ந்து இந்த விடையம் இன்று பேசுபொருளாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

தேசியத்தலைவர் உயிரோடு இருக்கின்றார் அல்லது அவர் வீரச்சாவடைந்துவிட்டார் என்ற விவாதம் கட்ந்த 13 வருடங்களாக இடம்பெற்று வருவதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர் இருக்கின்றாரோ அல்லது இல்லை என்ற விவாதத்திற்கு அப்பால் தேசியத்தலைவர் எந்த இலட்சியத்திற்காக உறுதியாக இருந்தார் என்பதை உணர்ந்து அந்த கொள்கைக்கு நோர்மையாக பயணிப்பதே தமது கடமை என கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *