பிச்சை எடுத்தால் மைத்திரியை சிறையில் அடைக்கலாம்- சரத் பொன்சேகா குற்றச்சாட்டு!SamugamMedia

அரசியல்வாதிகள் பிச்சை எடுப்பதும் சிறையில் அடிக்ககூடிய குற்றம் என்றும் எனவே பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேன சிறைக்கு செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன பணம் இல்லை என கதை அளக்கிறார் உண்மையில் சொல்லப்போனால் அவர் வாழ்வது அரேபிய சுல்தான் வாழும் வாழ்க்கை. அவரது பிள்ளைகள் வாழ்வதும் அப்படித்தான். கொழும்பில் வீடு, பொலன்னறுவையில் வீடு. வாகனங்கள் என வசதியாகவுள்ளார்.

எனவே பொய்யாக பணம் இல்லை என்கிறார்.வீடுகள் இரண்டில் ஒன்றை ஏலம் இட்டாலே குறித்த பணம் கிடைக்கும். அவர் தனியாள் இல்லை. சகோதரர் இருக்கிறார்.

அவருக்கு 24 மணித்தியாலத்தில் அதனை கட்டி முடிக்கலாம். அதைவிட்டு காசு முட்டி பணம், பிச்சை எடுத்தல் என்று நாடகம் ஆடுகிறார்.

பிச்சை எடுப்பது என்பதும் சிறையில் அடைக்கக்கூடிய ஒரு தவறு தான். அடுத்த முறை பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் தான் அவர் சிறை செல்வார் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *