பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி! SamugamMedia

பல்லேபெத்த பிரதேசத்தில் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஊருபொக்க பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை பல்லேபெத்த களுவரகஹா வளைவுக்கு அருகில் யாத்ரீகர் ஒருவரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி தூங்கியதன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது பேருந்தின் என்ஜின் பெட்டியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பல்லேபெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *