யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பலருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மருத்துவமனையின் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை விடுதியில் தங்கி நின்று சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கே இவ்வாறு சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பலருக்கு காய்ச்சல், வயிற்றோட்டம், வாந்தித் தொற்று இருப்பதனால் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அதுதொடர்பில் மருத்துவமனையின் பணிப்பாளருக்கு அறிவிக்குமாறு அறிவிக்குமாறு கோரும் அறிவித்தல் மருத்துவமனையின் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குடிநீரின் ஆரோக்கியமற்ற தன்மையின் காரணமாகவே இந்த நோய் நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

