திருமலையில் அரச ஊழியர்களுக்கான சிங்கள மொழி பாட நிறைவு நாள் நிகழ்வு!SamugamMedia

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள மொழி பாடநெறியின் இறுதி நிறைவு நாள் நிகழ்வு பிரதேச செயலகத்தில் நேற்று (15)மாலை இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில்  இடம் பெற்ற சிங்கள மொழி பாடநெறியானது 150 மணித்தியாலயங்களை கொண்ட குறித்த பாடநெறியானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதில் சிங்கள பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளை தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் மேடை ஏற்றி அலகரித்தனர். மொழி போதனாசிரியர்களுக்கான பரிசில்களையும் இதன் போது பிரதேச செயலாளர் வழங்கி வைத்தார்.
 இதில் 62 அரச ஊழியர்கள் இப் பாடநெறியை நிறைவு செய்தனர்.
குறித்த நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் உடகெதர,சிங்கள மொழி போதனாசிரியர்கள்,மாவட்ட செயலக மொழி இணைப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply