
கொழும்பு, ஜனவரி 26: குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (என்.டபிள்யூ.எஸ்.டி.பி.) கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
நாட்டில் நிலவும் வறட்சி நிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மக்கள் குழாய் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.