கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முன்பள்ளிகளின் மாதாந்த முழுநிலா நாள் நிகழ்வு!SamugamMedia

அனைத்துலக மருத்துவநல அமைப்பு, மற்றும் றட்ணம் பவுண்டேசன்  அனுசரணையில் கிளிநொச்சி வடக்கு கல்வி வலயம், ஆரம்ப முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவின்” முழு நிலா நாள் ” றங்கன் முன்பள்ளிக் கொத்தணியில் முன்றலில் அண்மையில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களால், விழா பற்றியும் பெற்றோர் பெருந்திரளாக வருகை தந்திருந்தமை பற்றியும் அவர்களின் விழிப்புணர்வு பற்றியும் கருத்துரைக்கப்பட்டது.

இதற்காக  IMHO, மற்றும் றட்ணம் பவுண்டேசன் நிறுவனங்களினால் நிதி உதவி வழங்கப்பட்டது.

இவ் முழு நிலா நாள் நிகழ்வில் அரங்கநிகழ்வுகளாக குழந்தைகளின் கலைநிகழ்வுகள்,  ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள்  சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு அரங்கம் ஏறின. இறுதியாக நன்றியுரையுடன் பெற்றோர்கள் ஆசிரியர்களின் முற்றத்து ஆடல் பாடலுடன் இனிதாக நிறைவேறியது.

Leave a Reply