வாகனங்கள் அதிக புகை விட்டால் இனிச் சிக்கல்!SamugamMedia

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை அவதானித்தால், அது குறித்து அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களை இலக்கத் தகடு தெளிவாக தெரியும் வகையில் புகைப்படமெடுத்து வட்ஸ்அப் அல்லது வைபர் மூலம் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

அதன்படி, 070 35 00 525 என்ற இலக்கத்திற்கு வட்ஸ்அப் அல்லது வைபர் மூலம் குறித்த புகைப்படங்களை அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *