புத்தளம் ஹுதா பள்ளி சந்தியில் நேற்று இரவு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலே குறித்த வேட்பாளர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாநகரசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் 4ம் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற 53 வயதுடையவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வேட்பாளரிடமிருந்து 3.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளையும் இன்று காலை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.




