புனித பாலைதீவு உற்சவகால கடைகளிற்கு அனுமதி! SamugamMedia

புனித பாலைதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த யாத்திரை உற்சவத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வருடாந்த ஆலய உற்சத்தை முன்னிட்டு யாத்திரீகர்களிற்கான விழாக்கால வியாபார நிலையங்களுக்கான நிலவாடகைக்கு வழங்குவதற்கான முற்பதிவுகளுடனான தொடர் இலக்கங்கள் வழங்குதல் மற்றும் விழா காலத்தில் வியாபார நிலையம் நடாத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் பற்றிய கலந்துரையாடல் பூநகரி பிரதேசசபையினால் நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 01.03.2023ம் திகதி புதன் கிழமை காலை 11 மணிக்கு பூநகரி பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறும் என பிரதேச சபை செயலாளர் அறிவித்துள்ளார்.

முன்னேற்பாட்டு கலந்துரையாடலில் கலந்து கொள்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply