உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கடந்த சில நிமிடங்களில் தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகுலுக்கும் படத்தைப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு திடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவை சந்திப்பதற்காக அவர் அண்டை நாடான போலந்திற்குச் சென்றிருந்த நிலையில், தனது திட்டமிட்ட நிகழ்சி நிரலுக்கு மாறாக அவர் உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு சென்றுள்ளார்.
உக்ரைனிய தலைநகருக்கு ஒரு முக்கியமான விருந்தினர் வருகிறார் என்று இன்று முன்னதாக ஊகங்கள் இருந்தன, உக்ரைனிய அரசியல்வாதியான லெசியா வாசிலென்கோ பைடன் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா படையெடுப்பு ஓராண்டு நிறைவை எட்டவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த விஜயம் அமைந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், மற்றும் முன்னாள் பிரதமரான பொரிஸ் ஜோன்ஸன் உள்ளிட்ட தலைவர்கள் உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், தற்போது பைடனுக்கு அங்கு விஜயம் செய்துள்ளார்.




