இன்றையதினம், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.





புலம்பெயர் வாழ் அராலியின் உறவுகளால் குறித்த மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
புலம்பெயர் வாழ் அராலி உறவுகளின் நிதியை ஒருங்கிணைத்து, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜாவினால் இந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்து வழங்கப்பட்டன.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ரதினி காந்தநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கையளிப்பு நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா, குறித்த உதவித்திட்டத்தை வழங்கி வைத்த நன்கொடையாளர்கள், வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தினர், வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





