ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டத்திற்கு முரணாக செயற்பட்டு வருவதாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
சுயாதீன ஆணைக்குழுவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தேர்தலை நடத்துவதற்கான நிதி வழங்கப்படவில்லை என்றும் ரஞ்சித் மதும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக தொன்று தொட்டு வருகின்ற நாட்டின் மரபுகளை மாற்றி வருவதாக ; ரஞ்சித் மதும பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதம் அளவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்குமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில் தேர்தலை நடத்த முடியும் செலவீனங்களுக்கான தொகையை பின்னர் செலுத்த முடியும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
எனவே நேற்றையதினம் எதிரணியிலுள்ளவர்கள் தமது எதிர்ப்பினை சபை நடுவில் காட்டியதற்காக ரஞ்சித் மதும பண்டார நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.




