நாக்கினால் சாதனை படைத்த அமெரிக்க இளைஞன்!SamugamMedia

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நீளமான நாக்கினால் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

Nick Stoeberl என்ற பெயர் கொண்ட அந்த நபருக்கு 3.97அங்குல நீளத்திற்கு நாக்கு அமைந்துள்ளது. இதன் மூலம் அவர் ஓவியங்களை வரைந்து வருகிறார்.

இதற்காக அவர் பிளாஸ்டிக் பைகளை எடுத்து நாக்கு முழுவதும் சுற்றிக் கொண்டு பின்னர் பெயிண்டை எடுத்து நாக்கில் வைத்து எதிரில் இருக்கும் ஓவியப்பலகையில் ஓவியங்களை வரைகிறார்.

இதனால் அவருக்கு Lickasso என்ற புனைப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் அவர் நாக்கினால் வரைந்த ஓவியம் ஆயிரத்து 200 டாலருக்கு விற்பனையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply