பிள்ளைகளை களத்தில் விட்டுவிட்டு தப்பியோடுவாரா பிரபாகரன்-ஆனந்தசங்கரி கேள்வி!SamugamMedia

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தியவர்களே இன்று அவருக்கும் துரோகம் செய்து தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் அவரது கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

விடுதலைப்புலிகள் கடந்தகாலத்தில் ஒரு அமைப்பை உருவாக்குமாறும் உதயசூரியன் சின்னத்தை பயன்படுத்துமாறு கேட்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஏனைய ஆயுதக்குழுக்களையும் ஒன்றிணைக்குமாறு என்னிடம் கேட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தமிழ்த் தலைவர்கள் என்றும் தற்போது  அவர் உயிருடன் இருப்பதாக பொய் கூறுவதாக வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

தப்பியோடக்கூடிய வாப்புகள் இருக்கும் போது தப்பியோடாத பிரபாகரன் இறுதி போரில் தப்பியோடியிருப்பார் என கூறுவது முற்றும் பொய்யான தகவல் என்றும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

அவர் காணாமல் போயிருந்தால்கூட பிரபாகரன் தற்போது இல்லை என்பதே தனது நிலைப்பாடு என்றும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *