கோமாளிகளின் கூடாரமே நாடாளுமன்றம்:ரணில் எவ்வாறு பிறந்தார்:குழம்பிய கடவுள்- காட்டமான ஸ்ரீதரன் எம்.பி!SamugamMedia

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறாது என்பது நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி ஆற்றிய உரையின் மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

காட்டில் வாழுகின்ற மிருகங்களில் மிகவும் தந்திரமானது நரி என்றும் அதேபோன்று இலங்கையில் வாழுகின்ற மிகவும் தந்திரமான மனிதர் என்றால் அது ரணில் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சி.சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணிலிடம் சரியான நேர்மையான ஜனநாயகமான வார்த்தைகளை எதனையும் அவதானிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அடிக்கடி பேசிக்கொள்வதன் மூலம் நாட்டில் ஏதாவது நடந்து விடுமென ரணில் நினைப்பதாக சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிறந்தார் என ஆண்டவனே சிலவேளைகளில் யோசிப்பதாகவும் அவ்வளவு தூரம் அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கௌரவமான மக்களின் வாழ்க்கை இலங்கையில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார். வெறும் வாய்வார்த்தைகள் மூலமும் நாணயத்தாள்களை அச்சிடுவதன் மூலமும் எதனையாவது செய்யமுடியும் என ரணில் நினைப்பதாக சி.சிறீதரன் குறிப்பிடுகின்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் கோசமிட்டு சிலர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறியதாகவும் இன்று இந்த நாடாளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக காணப்படுவதாக சி.சிறீதரன் குற்றம் சுமத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *