உயர்தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் பெறாத பரீட்சார்த்திகள் எவரேனும் இருப்பின், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான றறற.னழநநெவள.டம க்குச் சென்று, சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் அனுமதி அட்டையின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

அதேபோல் அனுமதி அட்டையின் பெயர், பாடம் மற்றும் மொழி ஆகியவற்றை திருத்திக்கொள்ளலாம்.

க.பொ.த உயர்தர 2021 பரீட்சை 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை நாடளாவிய ரீதியில் 2,439 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களையும் இராணுவத்தையும் இணைத்து செயற்பட அரசு விரும்புகின்றது! விக்கி எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *