தூசு தட்டப்படும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம்!SamugamMedia

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் அலுவலகத்தில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவபடுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியின் நிறத்தில் வர்ணம் பூசி பேணி வந்த அலுவலகம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்ட பின்னர் அலுவலகம் செயலிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று கடற்தொழில் அமைச்சர்யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பு குழு அலுவலகம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் தூசு தட்டி தூய்மையாக்கப்படுகின்றது.

Leave a Reply