இலங்கையில் புதிய “ஸ்பீட் போர்ஸ்“ படையணி உருவாக்கம்!

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை சமாளிக்க முன்னாள் முப்படை வீரர்களை உள்ளடக்கிய 500 பேர் கொண்ட “ஸ்பீட் படையணி” (SPEAT Force) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை “Sri Lanka Prisons Emergency Action and Tactical Force” (SPEAT Force) என்ற பெயரில், இதன் முதல் குழுவின் 194 பேர் நான்கு மாத நீண்ட பயிற்சிகளை முடித்துக்கொண்டு நேற்று அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வெளியேறினர்.

சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் வலுவூட்டப்பட்ட மனிதாபிமான அணுகுமுறையுடன் இந்த படையினர் தமது பணிகளை மேற்கொள்வர்.

அத்துடன் சிறை தண்டனை முடிந்து மீண்டும் சமூகத்திற்குள் நுழையும் முன், கைதிகளை பயனுள்ள குடிமக்களாக மாற்றுவது இந்த படையணியின் கடமையாகும் என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *