கற்பிட்டியில் புதிய மஸ்ஜித் திறத்துவைப்பு!SamugamMedia

கற்பிட்டி – மணல்தோட்டம் பகுதியில் பொது மக்களின் ஒத்துழைப்புடன் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ள முபீன் மஸ்ஜித் நேற்று ஜூம்ஆ தொழுகையுடன் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது,  கணமூலை உம்முல் பழ்ல் பெண்கள் அரபுக் கல்லூரி அதிபர்,  நல்லாந்தளுவ ஜூம்ஆ மஸ்ஜித் பேஷ் இமாம் அல்ஹாபிழ் ஏ.ஏ.முஜிபுர் ரஹ்மான் (மனாரி முதலாவது ஜூம்ஆ  உரையை நிகழ்த்தினார்.
டுபாயிலுள்ள மஸ்ஜித் ஒன்றில் பேஷ் இமாமாக கடமையாற்றும் கலீலுர் ரஹ்மான் மௌலவி மற்றும் வெளிநாட்டில் வாழும் கற்பிட்டி நலன் விரும்பிகள் உள்ளிட்டோரின் நிதி உதவியில் இந்த மஸ்ஜித் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த மஸ்ஜித் திறப்புவிழா நிகழ்வில் உலமாக்கள் உட்பட பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply