முதலீட்டுச் சபைக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய பணப்பாளர் சபை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய பணிப்பாளர் சபைக்கு மைக்ரோ ஹோல்டிங்கஸ் தனியா் நிறுவனத்தின் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி லோரன்ஸ் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தந்திரி ட்ரோலர்ஸ் தனியாா் நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் அதுல ஹபுதந்திரி மற்றும் சர்வதேச முதலீட்டு வங்கியாளர் ஜயமின் பெல்பொல ஆகியோா் இந்த பண்ப்பாளர் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதிய பணிப்பாளர் சபை விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ராஜா எதிரிசூரிய ஆகியோரை இலங்கை முதலீட்டு சபையில் வைத்து சந்தித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *