
2022ஆம் ஆண்டில் இதுவரையான 25 நாட்களில் மாத்திரம் 15 ஆயிரத்து 704 கோடி ரூபாவை அரசாங்கம் அச்சிட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தற்போதுவரை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 905 கோடி ரூபா அச்சிட்டுள்ளதால் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அனைத்துப் பொருட்களின் விலைகள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தென் மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.