கிளிநொச்சியில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை

‘நீதிக்கான அணுகல்’ எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

இன்று காலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய வளாகத்தில் நடமாடும் சேவையை நீதி அமைச்சர் அலி சபிரி ஆரம்பித்து வைத்தார்.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நீதி அமைச்சரை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.

இதன்போது விருந்தினர்களிற்கு மாலை அணிவிக்கப்பட்டு தமிழ் இன்னிய வாத்திய அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு வரவேற்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *