
கொழும்பு, ஜனவரி 27: நாட்டில் நிலவும் வறட்சி நிலை தொடர்ந்து, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்தால், நீர் மின் உற்பத்திக்காக நீர் வெளியிடப்படாது என்று நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்
“விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கியே நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை நீர்ப்பாசன அமைச்சு விடுவித்து வருகிறது. நாட்டில் தற்போது நிலவும் வறட்சி நிலை நீடித்தால், நீர் மின் உற்பத்திக்கு நீரை வெளியிட சாத்தியமில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில், மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள முன்னறிவிப்பை கருத்தில் கொண்ட பின்பே நீர் மின் உற்பத்திக்கு நீர் விநியோகிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.