
“நீதிக்கான அணுகல்” எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவையினால் விளையாட்டு மைதானத்தில் கூடவேண்டிய நிலைக்கு மாணவர்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று ஆரம்பமான நீதிக்கான அணுகல் எனும் தொணிப்பொருளில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கற்றல் செயற்பாட்டுக்காக வருகை தந்த மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
பாடசாலை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டு அல்லது பாடசாலை விடுமுறை நாட்களில் இவ்வாறான சேவையை நடார்த்தியிருந்தால் இவ்வாறான நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

