மூன்றாவது சர்வதேச சித்த மருத்துவ ஆய்வு மாநாடு யாழில் ஆரம்பம்

“புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல்” என்ற தொனிப் பொருளின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு (JUICE 2022) களின் வரிசையில்

யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகின் ஏற்பாட்டில், மூன்றாவது சர்வதேச சித்த மருத்துவ ஆய்வு மாநாடு கைதடியில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

“புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல்” என்ற தொனிப் பொருளின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு (JUICE 2022) களின் வரிசையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

மாநாட்டிற்கு , முன்னரான பயிற்சிப் பட்டறை சித்த வைத்திய அலகின் தலைவர், சித்த வைத்தியர் தயாளினி திலீபன் தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி மருத்துவர் எஸ். ராஜ்குமார், கைதடி சித்த போதனா வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி சித்த மருத்துவர் ஐ. ஜெபநாமகணேசன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

மேலும் “சித்த மருத்துவத்தின் ஊடாக ஆரோக்கியமான வாழ்வுக்கான நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தல்” என்ற தலைப்பிலான சர்வதேச சித்த வைத்திய ஆய்வு மாநாடு எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply