தமிழ் மக்களை காப்பாற்ற யாரும் இல்லை: அரசை கேள்வி கேட்கவும் யாரும் இல்லை! கந்தையா சிவநேசன்

நாட்டில் உள்ள புராதன இடங்களை பாதுகாக்கும் தொல்பொருள் திணைக்களம் இன்று இல்லை,அதற்கு பதிலாக தமிழ் மக்களின் இடங்களை பௌத்த மயமாக்கும் திணைக்களமே உள்ளது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தை துண்டாடுவதற்கு மூன்று திணைக்களங்கள் இங்கு உள்ளன.

வனஜீவராசிகள், வன இலாகா, தொல் பொருள் திணைக்களம், மகாவலி திட்டம் எப்போதே கைவிடப்பட்டது.ஆனால் மக்களின் குடியேற்றங்களை அபகரிப்பதற்கு மகாவலி திட்டம் இப்போதும் பயன்படுகிறது.

இந்த விடயத்தில் கடந்த அரசும் இந்த அரசும் மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றன.

மக்களின் பரம்பரை நிலங்கள் கூட இன்று வரை கையகப்படுத்தப்படுகின்றன. இந்த விடயத்தில் தமிழ் தரப்புகள் மிக மிக குறைந்த அளவு முனைப்பையே காட்டுகிறது.

மணலாறு பிரதேசம் இப்போது சூறையாடப்படுகிறது.யாழ்ப்பாணத்துக்கு வழங்கும் முக்கியத்துவம் இங்கு இல்லை.

தாராளமாக இங்கு கொண்டு வந்து தமிழ் மக்களை இருத்துங்கள்.தமிழ் மக்களின் இடத்தில் சட்டங்களை மீறி பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

தாம் திறம் என்று கூறும் சட்டத்தரணிகள் முன்னிலையில் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது.எங்களை காப்பாற்ற யாரும் இல்லை,அவர்களை கேட்கவும் யாரும் இல்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *