
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோட்டா அரசு மூன்றாக பிளவடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது சரியான மின்சார வசதி இல்லாத நாட்டில் பொலிஸ் அதிகாரிகளின் வீதி சமிஞ்சையிற்கு ஏற்ப வாகனங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
எண்ணெய் இல்லை, டொலர் இல்லை, மருந்து வாங்க டொலர்கள் இல்லை. உணவில்லாமல் நீரை அருந்தியாவது இருக்கலாம் ஆனால் மருந்து இல்லாமல் வயதானவர்களிற்கு வாழ முடியுமா?
நாட்டில் சீனி வரிசை, எண்ணெய் வரிசை, பால்மா வரிசை காணப்படுகின்றன. சீமெந்து ஒரு மூடையின் விலை 2000 ஆக அதிகரித்து உள்ளது.
எந்த ஒரு துறையிலும் நிம்மதி என்பது இல்லை. விவசாயமாக இருக்கட்டும், எரிவாயுவாக இருக்கட்டும், ஆசிரிய துறையாக இருக்கட்டும் சீரற்றே காணப்படுகிறது.
எனவே இவற்றை நிவர்த்தி செய்ய நாங்கள் ஆட்சிக்கு வருவோம். நீங்கள் கேட்கலாம் எவ்வாறு வர முடியும் என்று.
நான் இதற்கு இவ்வாறு பதிலளிக்கிறேன், ஆகஸ்ட் மாதம் வரும் போது இவ் ஆட்சி 3ஆக பிளவுபடும். ஒன்று சிறிசேனவின் கூட்டம், அடுத்தது பெசில் ஒரு கூட்டம், மீதி உள்ளவர்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள்.
ஆனால் அச்சந்தர்ப்பத்தில், ஜொனஸ்டன் குணவர்தன, ரோஹித அபே குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய மூன்று பேர் மாத்திரம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்
ஆகவே நாமும் சரியான முடிவுகளை எடுப்போம் என்றார்.