இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றால் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 2,720 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 372,079 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2ஆயிரத்து 186 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.


