
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு இன்று (20) விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவர் இதன்போது பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உரையாற்றும் திகதி மற்றும் நேரம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

