சிவப்பு நிற உடையில் நாய் குட்டிகளை வைத்து விளையாடும் பிக்பாஸ் ஜனனி! – வைரலாகும் கியூட் போட்டோஸ் SamugamMedia

விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் ஜனனி.

லாஸ்லியாவை போல, இலங்கையை சேர்ந்த போட்டியாளரான இவர். அறிமுகமான அன்றே தன்னுடைய எளிமையான அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்த ஜனனி, பின்னர் தேவை இல்லாமல் சில இடங்களில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், ரசிகர்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற துவங்கினார்.

70 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடிய பின்னர் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் ஜனனி, தற்போது தீவிரமாக பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதன்படி லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.

தற்போது சிவப்பு நிற உடையில் நாய் குட்டிகளை வைத்து விளையாடுவது போல் படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Leave a Reply