கொழும்பில் நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்ற போராட்டம் – சட்டத்தரணிகள் வெளியிட்ட தகவல்! SamugamMedia

நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய மக்கள் காங்கிரஸினால் போராட்டம் நடத்தியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

பெயர்களை குறிப்பிட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது பாரிய தவறு என ஜனாதிபதியின் சட்டத்தரணி யு.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமைகளான கருத்துக்களை வெளியிடும் உரிமையை மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடாத வகையில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என இங்கு தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில்,

நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழக்குகள் குறித்து வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். 

நாம் எமது ஜனநாயக உரிமைக்காக ஒரு இரத்தச் சொட்டு விழாது உரிய முறையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தோம். நாம் அந்தளவு மக்கள் கூட்டம் வரும் என எதிர்பார்க்கவுமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *