இந்திய நில அதிர்வுகளால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பு! அனர்த்த முகாமைத்துவத்தின் புதிய அறிவிப்பு SamugamMedia

இந்தியாவில் நில அதிர்வு ஏற்பட்டால் அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் துணை பணிப்பாளர் பிரதிப்கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிர்வு ஏற்பட்டால் அது இலங்கையை பாதிக்கும் என்பது பற்றி நேற்றைய தினம் வரையில் இந்தியா அதிகாரபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகில் தற்பொழுது காணப்படும் தொழில்நுட்பங்களின் பிரகாரம் குறிப்பிட்ட ஓர் இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நில அதிர்வு ஏற்படும் என எதிர்வு கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான், துருக்கி போன்ற நாடுகளிலும் முன்னறிவிப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையின் அமைவிடத்தை கருத்திற்கொள்ளும் போது பாரிய பூமியதிர்வு ஏற்படுக்கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவு என நிலச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஸ்ட ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் 3.5 ரிச்டருக்கும் குறைவான நில அதிர்வுகளே பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1615ம் ஆண்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக சில குறிப்புக்கள் காணப்பட்டாலும் பூரணமான தகவல்கள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply