முதியவர் சடலமாக மீட்பு!

சாவகச்சேரி மறவன்புலவு, தனங்கிளப்பு பகுதியில் வீடொன்றில் நேற்று மாலை 62 வயதான முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் சந்தேகத்துக்கிடமான நிலையில் கிடந்த முதியவரை அவதானித்த அயலவர்கள் சாவகச்சேரி பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் பரிசோதித்த போது குறித்த முதியவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்தது. உயிரிழந்தவர் மறவன்புலன் தனங்கிளப்பை சேர்ந்த 62 வயதான சுப்பிரமணியம் தவராசா என்பராவார்.

இவரது குடும்பம் யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் நிலையில் இவர் பல காலமாக தனித்தே வசித்து வருவதாக கூறப்படுகிறது. மரணம் தொடர்பாக, சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *