யாழில் இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு

கொரோனா அச்சுறுத்தலான காலப்பகுதியில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய யாழ்.மாவட்ட இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு,  இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில், யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு குருதியை வழங்கினர்.

இந்த குருதியை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தராஜா முன்னெடுத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி, வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *