வவுனியாவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வவுனியாவில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றினால்  நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மேலும் பெரியார்குளம் பகுதியில் சுகவீனம் காரணமாக வீட்டில் மரணமடைந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவருக்கு  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா  வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொரோனா விடுதிக்கு மாற்றி அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று  உயிரிழந்துள்ளார்.

Leave a Reply