பனியில் புதையுண்டு உயிரிழந்த குடும்பம்!

கனடா-அமெரிக்க எல்லையில் பனியில் புதையுண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா-அமெரிக்க எல்லை மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடாவின் எல்லைப் பகுதியான எமர்சன் பகுதியில் பனியில் புதையுண்ட நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மனிதக் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுடன் தொடர்புடைய குடும்பத்தினரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 35 வயதான கணவர், 32 வயதான தாய், 12 மற்றும் 3 வயதான சிறுமிகளே இவ்வாறு பனியில் புதையுண்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த குடும்பத்தலைவர் குஜராத்தில் பள்ளி ஆசிரியர் எனவும் அமெரிக்கா செல்லும் ஆசையில் 65 இலட்சம் கொடுத்து குடும்பத்தினருடன் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *