சங்கானை சந்தையில் உள்ள கடையை பிரித்து கைவரிசையை காட்டிய திருடர்கள்! SamugamMedia

நேற்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சங்கானை சந்தைக்குள் உள்ள கடையினை உடைத்து 80 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது.

கடையின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள் தமது கைவரிசையை காட்டிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply