மட்டக்களப்பில் கூட்டங்கூட்டமாக திரியும் மக்கள்?

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பில் மாத்திரம் 321 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த ஏழு தினங்களில் 2086 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிய கொரோனா தொற்றாளர்களும், கொரோனா மரணங்களும் அதிகரித்துவருவதன் காரணமாக பொதுமக்கள் சமூகப்பொறுப்புடன் செயற்படுவதன்மூலம் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும்.

அத்துடன், சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவோர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிககைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 110 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 43 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பில் மொத்தமாக 157 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

அத்துடன், கடந்த ஏழு தினங்களில் 2086 கொரோனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையிலும், மட்டக்களப்பில் பலசரக்குக் கடைகளில் மக்கள் கூட்டங்கூட்டமாக நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, இவற்றைத் தவிர்த்து சமூக இடைவெளியைப் பேணுங்கள். முகக் கவசங்களை சரியான முறையில் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவிக்கொள்ளுங்கள்.

மேலும், கூட்டங்கூடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதனை மீறுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *