நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியான இராணுவத் தளபதியின் செய்தி !

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் பொது முடக்கம் அமுலாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் இராணுவத் தளபதியும் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும்.

Advertisement

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *