விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் இந்த இறுதி போட்டியில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.
அசீமுக்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஜனனி, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளர் ஆவார்.

இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை ஜனனி அளித்துள்ளார்.

அதில், “உங்களோட பிக்பாஸ் சம்பளம் எவ்வளவு?. எத்தனை நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்தீங்க?” என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஜனனி, “73 நாட்கள் இருந்தேன்”. என பதில் அளித்தார்.
மேலும் சம்பளம் குறித்து பேசும் போது, “என்னனு இங்க சொல்ல முடியும்?. அதெல்லாம் கம்பெனி ரகசியம் ஆச்சே” என கூறி சம்பளம் குறித்த தகவலை கூற மறுத்து டாஸ்கை ஜனனி நிறைவு செய்தார்.




