
கொழும்பு , ஜனவரி 28:
துறைமுகங்கள், சுங்கம், நீர் வாரியம், இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகியவை வேலைநிறுத்தம் செய்வதிலிருந்து தடை செய்யப்பட வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேற்படி துறைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது, நாட்டு மக்கள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுபோன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை நாட்டின் அரசியலமைப்பில் தடை செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.