
கொழும்பு, ஜனவரி 28:
சிங்கள சினிமாவின் பிரபல நடிகரும், ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய சக கலைஞர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.
கலைஞர்கள் குழுவொன்று அவன்ட்-கார்ட் அமைப்பின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை அண்மையில் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளனர்.
இதன் போது, இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கலந்துரையாடுவதாக நிஸ்ஸங்க சேனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் அவர்கள் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் கையளித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தற்போது 04 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.