
பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் கட்டண மீட்டர் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம், நடமாடும் டெக்ஸி மீட்டர் சேவை மையங்களை அமைப்பதற்கும், பிரதேச செயலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட டெக்ஸி மீட்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தது.
இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமானது மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்தது.