இன்று போக்குவரத்து சேவைகள் பாதிப்பு? வெளியான விசேட அறிவிப்பு SamugamMedia

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், ரயில்கள் வழமைபோல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொது மக்கள் இன்று வழமை போன்று தமது கிளை வலையமைப்புகளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரச வங்கிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, வழமையான முறையில் இன்று பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *