நாடாளுமன்றத்திலுள்ள வங்கிக் கிளையும் மூடப்பட்டது!SamugamMedia

வங்கிகளின் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடும் அதேவேளையில் நாடாளுமன்றத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளையும் மூடப்பட்டுள்ளது.

இதனால் அங்கிருக்கும் பணியாளர்களும் நாடாளுமன்றத்திற்கு செல்லுகின்ற உறுப்பினர்களும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிக் கிளை மூடப்படும் எனத் துண்டுப் பிரசுரமும் காட்சிப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டிருந்த போதிலும், நீர், மின்சாரம் உள்ளிட்ட நாடாளுமன்றத்தின் ஏனைய சேவை அலுவலகங்கள் வழமை போன்று செயற்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *