மாம்பழத்தால் வந்த வினை! பாடசாலை மாணவன் உட்பட நால்வருக்கு ஏற்பட்ட நிலை! SamugamMedia

சூரியவெவ மதுனாகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழ தோட்டத்திற்குள் புகுந்து சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான மாம்பழங்களைத் திருடியது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு சந்தேக நபர்களும் கடந்த 27ஆம் திகதி மாலை 6 மணியளவில் காரில் வந்து மாம்பழத்தோட்டத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பண்ணை உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரணை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *