இன்றைய தினம் பேருந்துவில் கஞ்சாவினை எடுத்துச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவு பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் காரைநகர் – மன்னார் அரச பேருந்துவில் 4 கிலோ கஞ்சாவினை எடுத்துச் செல்லும் வேளை சங்குப்பிட்டி பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

