போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக ஒழுக்கக்கேடுகளை தடுக்கும் வேலைத்திட்டம்! – அமைச்சர் பிரசன்ன SamugamMedia

நகர்ப்புற குடியிருப்புகளில் வாழுகின்ற குழந்தைகளின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், உடனடியாக ஆரம்பிக்கப்படுமென நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை செத்சிறிபாய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் ரணதுங்க இவ்;வாறு தெரிவித்தார்.

நகர்ப்புற குடியேற்றங்களில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக ஒழுக்கக்கேடுகளை தடுக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

தற்போது, நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நாடளாவிய ரீதியில் இயங்கும் நகரக் குடியிருப்புகளின் எண்ணிக்கை 22 என தெரிவித்த அமைச்சர் கொழும்பு, கம்பஹா, கடுவெல, அனுராதபுரம், மஹியங்கனை ஆகிய நகரங்களை அண்மித்த பகுதிகளில் இவை இயங்கி வருவதாக நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நகர குடியிருப்புகளில் உள்ள 200 பிள்ளைகளுக்கு சுகாதார உபகரணச் சோடிகளும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *